Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

பஞ்சபூத தன்மை:

நெருப்பு ராசி - உடனடிசெயல்பாடு.

நிலம் ராசி - நிதானமான செயல்பாடு, பொருமையாக செயல்படுதல்.

காற்று ராசி - போராட்டமான செயல்பாடு,விசயங்களை கடத்துதல்
தகவல் பறிமாற்ற செயல்கள்.

நீர் ராசி - உணர்ச்சிகரமான செயல்பாடுகள்.

image

ஆண், பெண் ராசியின் தன்மை:

ஆண் ராசி - ஆண் தன்மையும் ஆணின் குணங்களையும்கொண்டது.

பெண் ராசி - பெண் தன்மையும் பெண்ணின் குணங்களையும் கொண்டது.

image

பிறந்த நட்சத்திரமும் குணங்களும்:


ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கேற்ப அவரிடம் சில பொதுவான குணங்கள் இருக்கும்.

01. அசுவினி

செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

02. பரணி

நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

03. கார்த்திகை

பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத் தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

04. ரோகிணி

கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

05. மிருகசீரிடம்

தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

06. திருவாதிரை

எளிமை, சாமர்த்தியசாலி,திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

07. புனர்பூசம்

கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

08. பூசம்

பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

09. ஆயில்யம்

செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

10. மகம்

ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

11. பூரம்

ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

12. உத்திரம்

நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

13. அஸ்தம்

ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய் மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

14. சித்திரை

ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரி மீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

15. சுவாதி

புத்திக்கூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

16. விசாகம்

வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

17. அனுஷம்

நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

18.கேட்டை

கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.

19. மூலம்

சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல் பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

20. பூராடம்

சுகபோகி, செல்வாக்கு மிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

21. உத்திராடம்

தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததைச் சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

22. திருவோணம்

பக்திமான், சமூகசேவகர், சொத்து சுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

23. அவிட்டம்

கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

24. சதயம்

வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாகச் செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

25. பூரட்டாதி

மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

26. உத்திரட்டாதி

கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணப்பிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

27.ரேவதி

தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

Read More
image

கிரககாரத்துவங்கள்:

சூரியன்:

தந்தை, மகன், வலது கண், அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ், கீர்த்தி, மாநகரம், நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர், சிவன், அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல், சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம், மண், அணுத் தொழில், அறுவை சிகிச்சை நிபுணர், துப்பறிதல்,தந்தையின்தொழில்.தன்னம்பிக்கை,சுயமரியாதை,நிர்வாகத்திறமை, தெய்வபக்தி, தராளமனப்பான்மை, இரக்கம்(கருணை, மனிதநேயம்), தியாக மனப்பான்மை,முன்கோபம்,பிடிவாதம்(வைராக்கியம்),தைரியம்.

சந்திரன்:

மனம், ஆழம், அறிவு, புகழ், தாய், மாமியார், திரவப் பொருள், பயணம், உணவுப்பொருள், இடது கண், இடமாற்றம், கற்பனை, பால், நதி, கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல், துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன் மனைவி, சோதிடம், அரிசி வியாபாரம், பழ வியாபாரம்,கவிதை,ஓவியம்,நீர்தொடர்பானதொழில்,பார்வதி,கற்பனை,சலனபுத்தி, அமைதி,சகிப்புத்தன்மை.

செவ்வாய்:

சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை, காவல்துறை, இராணுவம், வெட்டுக் காயம், வீரம், பூமி, ரத்தம், பல், முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம், அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை, செங்கல் சூளை, தாதுப் பொருட்கள், பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை. முன்கோபம், ஆத்திரம், அவசரம், அகங்காரம், வீரம், ஆணவம், கர்வம், வீன்சண்டை, வாக்குவாதம்,ஆதிக்கஉணர்வு.

புதன்:

கல்வி, அறிவு, வணிகம், பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர், கணிதம், பத்திரிகைத் தொழில், நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம், கைகள், கழுத்து, வரவேற்பு அறை, உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி, புலனாய்வுத்துறை,தரகு, மஹாவிஷ்ணு, தூதரகப்பணி. பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை,வசீகரத்தன்மை,அறிவாற்றல்,தந்திரம்,கலகலப்பானவர்,கோழைத்தம்.

குரு:


ஜீவன், வேதம், பக்தி, ஞானம், ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர், நீதிபதி, உயர்குலம், ஆசிரியர், கௌரவம், சாந்த குணம், தெற்கு, சதை, தொடை, பூஜை அறை, பசு, அமைச்சர், நிர்வாகி, மூக்கு, கரும்பு, வாழை, சோதிடம், நீதித்துறை, தட்சணாமூர்த்தி,சாந்தம், பொறுமை, தெய்வ நம்பிக்கை, உலக அறிவு (பொது அறிவு),மதிப்பு,மரியாதை,பண்பாடு,கண்ணியம்.

சுக்கிரன்:

மனைவி, சகோதரி, காமம், காதல், பாடகன், நடிகன், வீடு சுகம், வாசனைத் திரவியங்கள், கருப்பை, கன்னம், வட்டித் தொழில், மதுபானம், ஆடை ஆபரணங்கள், மலர், வேசி, திருமணம், விந்து, பணம், இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா, மஹாலட்சுமி, மூத்த சகோதரி, மூத்த மருமகள்,கலைஆர்வம்,ஆடம்பரபிரியம்.

சனி:

மூத்த சகோதரன், சேவகன், கழுதை, எருமை, தொழில்காரகன், தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண உறுப்பு, சேமிப்பு அறை, சாப்பாட்டு அறை, சாலை, வாயு சம்பந்தமான நோய், நிலக்கரி, சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல், தொழிற்சாலையில் எடுபிடி வேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும் வேலை, பழைய பொருள் விற்பனை, துப்புறவுத் தொழில், கால்நடை வளர்த்தல், லட்சுமி, பரமசிவன்,கர்மா,அரசுதூதுவர்.

ராகு:

வாய், உதடு, காது, முஸ்லீம், கோபுரம், அகலமான வீதி, தகப்பன் வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை, குடை, பாம்பின் தலை, கடத்தல் தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக், இரசாயனம், மொட்டை மாடி, சேமிப்புக் கிடங்கு, விதவை, தொழுநோய், மருத்துவம், வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம் செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத் தொழில், போகக்காரகன், வஞ்சகம், சூது,பொய், களவு.

கேது:

சாயா கிரகம், மோட்ச காரகன், ஞானம், தியானம், தவம், மௌனம், கயிறு, நூல், கூந்தல், மூலிகை, பாம்பின் வால், குறுகிய சந்து, மருத்துவம், சோதிடம், ஆன்மீகம், சட்டத்துறை, சந்நியாசம், துறவறம், தாய்வழிப் பாட்டன், நரம்பு, குளியல் அறை, ஞானம், மனவெறுப்பு, கொலை செய்தல்

Read More
image

உறவுகளும், உறவுமுறைகளும் சமூகத்தில் வெளிப்பாடும்
கிரகங்களின் உறவுகள்:

சூரியன் - தந்தை, மூத்த மகன்.

சந்திரன் - தாய், மூத்த சகோதரி.

புதன் - இளைய சகோதரி, இளைய சகோதரன், மாமன்.

சுக்கிரன் - மனைவி, சகோதரி,, அத்தை, மகள், மருமகள்.

செவ்வாய் - சகோதரன், கணவன், மருமகள்.

சனி - மூத்த சகோதரன், சித்தப்பா.

ராகு - தந்தைவழி முதியோர்.

கேது - தாய்வழி முதியோர்.

குரு - குழந்தை, பெரியப்பா.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு உறவு முறைகள் உண்டு அந்த உறவு முறைகளும் அதற்குள்ள தொடர்பையும் சமுகத்தில் அதன் வெளிப்பாடும் அந்த கிரகத்துடன் தொடர்பு கொள்ளும் கிரகங்களை வைத்து பார்க்க வேண்டும்.

Read More
image
Kannan Ayyakannu shared a post  
51 w

Super

Kannan Ayyakannu changed his profile picture
51 w

image
Kannan Ayyakannu changed his profile picture
51 w

image
A VISWARAMAN changed his profile picture
51 w

image

மீன ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.

02. பிறர் முன்னிலையில் குளிக்கக் கூடாது.

03. மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.

04. ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.

05. வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.

06. வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.

07. அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.

08. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.

09. வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

10. தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.

11. பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.

12. கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.

13. குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று.

Read More
image

கும்ப ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.

02. குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.

03. மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்.

04. சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்.

05. வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தாள் செல்வம் பெருகும்.

06. ஏழைகள் அல்லது கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்.

07. ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம். ஆனால் அதை அருந்தக்கூடாது.

08. வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.

09. விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.

10. மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்.

Read More
image