Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

சிம்ம ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.

02. மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.

03. ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.

04. கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.

05. உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.

06. யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.

07. மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.

08. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில், அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும். சுப காரியத் தடைகள் நீங்கும். இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.

09. உண்மையே பேச முயற்சியுங்கள். நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்

image

கடக ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது.

02. வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.

03. நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும்.

04. எப்பொழுதும் வெறும் காலுடன் கோயிலுக்கு செல்லவேண்டும்.

05. ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.

06. பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.

07. சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும். இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்

image

மிதுன ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள் சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.

02. முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.

03. புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.

04. உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.

05. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திட்டக்கூடாது. அவர்களை புதன் கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.

06. பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது. துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.

07. வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.

08. பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும். ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்

image

ரிஷப ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பெருக்கும்.

02. சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.

03. மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல், பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம். கவனம் தேவை.

04. மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம். இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.

05. பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.

06. பட்டு, நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.

07. ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.

08. நீடித்த நல்வாழ்விற்கு - உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள். இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.

image

மேஷ ராசி லால் கிதாப் பரிகாரங்கள் :

01. எந்தப் பொருளையும் இலவசமாக வாங்காதீர்கள். ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .

02. சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.

03. பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும். பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.

04. ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது. இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.

05. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.

06. தாய், குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.

07. உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும். அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்

image
Mathi A changed his profile picture
2 yrs

image

test
test

SIVA KUMAR changed his profile picture
2 yrs

image
MY HUB MARKETING changed his profile picture
2 yrs

image

image