மீன ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.

02. பிறர் முன்னிலையில் குளிக்கக் கூடாது.

03. மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.

04. ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.

05. வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.

06. வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.

07. அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.

08. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.

09. வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

10. தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.

11. பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.

12. கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.

13. குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று.

image

கும்ப ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.

02. குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.

03. மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்.

04. சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்.

05. வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தாள் செல்வம் பெருகும்.

06. ஏழைகள் அல்லது கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்.

07. ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம். ஆனால் அதை அருந்தக்கூடாது.

08. வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.

09. விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.

10. மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்.

image

மகர ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள்,யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு,ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.

02. ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ ,அதற்காக முயற்சிக்கவோ கூடாது. இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.

03. பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும். அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.

04. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.

05. 48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நல்லது. அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல.

06. கருப்பு,நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.

07. ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால்,மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும். இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.

08. கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது.

image

தனுசு ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.

02. தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.

03. பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.

04. திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.

05. வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

06. வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.

07. அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.

08. யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.

09. வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்

image

விருச்சிக ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

01. வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.

02. தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.

03. அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.

04. செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.

05. சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.

06. பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

07. இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.

08. யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள். அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.

09. செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.

10. செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.

11. சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.

12. மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .

13. செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை, கடன், நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்

image