தனுசு ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:
01. தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
02. தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.
03. பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.
04. திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.
05. வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
06. வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.
07. அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.
08. யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.
09. வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்
