Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
ராசியின் பருவங்கள்:
ராசியின் பருவநிலையை சூரியனை வைத்து பிரிக்கலாம் பொதுவாக வான்வெளியில் சூரியன் பூமியைச் சுற்றவில்லை பூமிதான் சூரியனை சுற்றுகிறது நாம் பூமியில் இருந்து பார்ப்பதால் ஜோதிடத்தில் சூரியன் பூமியைச் சுற்றுவதாகத் எடுத்துக் கொள்கின்றோம்
சூரியன் மீன ராசிக்கு வந்தவுடன் வெயில் காலம் பங்குனி மாதம் முதல் ஆரம்பமாகி பங்குனி சித்திரை வைகாசி வெயில் காலமாக இருக்கும்.
ஆனி ஆடி ஆவணி காற்று காலமாக இருக்கும்.
புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாழைகாலமாக இருக்கும்.
மார்கழி தை மாசி குளிர் காலமாக இருக்கும் இப்படியே நாம் நான்கு பருவங்கள் அழைக்கிறோம்.
ஜோதிடத்தில் தமிழ் மாதங்கள்:
ஜோதிடத்தில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்து ராசி மண்டலத்தின் 360 பாகையை 365.25 நாட்களில் சுற்றி வருகிறது இதை நான்கு பருவங்களையும் மூன்று இயக்கங்களையும் இணைத்து 12 தமிழ் மாதங்களாக பிரித்து பெயர் சூட்டியுள்ளனர்.
தமிழ் வருடப் பிறப்பு வருடத்தின் முதல் மாதம் மேஷத்தை மையமாகக் கொண்டு எடுத்துள்ளனர் இதை சில மாதங்களில் நடைபெறும் சம்பவங்களை அறிய பயன்படுத்தவே இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.
ராசிகளின் இயக்கம்:
சாரம்
இயங்கி கொண்டே இருப்பது மாற்றங்களை விரும்புவார்கள் இவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்கமாட்டார்கள் பணிகளில் மாற்றங்களை விரும்புவார்கள் புதுமையை புகுத்துவார்கள்.
ஸ்திரம்
நிலையாக இருப்பது மாற்றங்களை விரும்புவதில்லை இவர்கள் ஒருஇடத்தில் நிலையாக இருப்பார்கள் பணிகளில் அரைத்த மாவையே அரைப்பதில் வல்லவர்கள் பழமைவாதிகள்.
உபயம்
சரம்பாதி ஸ்திரம்பாதி கலவை சமயத்திற்கேற்ப இவர்கள் நிலையாகவும் காரியம் முடிந்த பிறகுவேறொரிடத்திற்க்கு மாறிவிடுவார்கள் பழமையும் புதுமையும் கலந்து விரும்புவார்கள்.