Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

Frequently Asked Questions in Astrology

திருமண காண்டம்:

ஜோதிடம் கற்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

ஜோதிட ஆசிரியர் : ருத்ரா ஜோதிடன் வெற்றி

Whats App

https://wa.me/message/SQZMXURFNCRAD1

கீழே உள்ள கேள்விகளுக்கு பலன்கள் சொல்ல தேவையான விதிகள் கற்று கொடுக்கப்படும்

திருமண காண்டம்:

1. திருமணம் யாருககு நடக்கும்?

2. திருமணம் யாருக்கு நடக்காது?

3. இள வயதில் யாருக்கு திருமணம் நடக்கும்?

4. திருமண வயதில் யாருக்கு திருமணம் நடக்கும்?

5. கால தாமதமாக திருமணம் யாருக்கு நடக்கும்?

6. ஒரே திருமணம் யாருக்கு நடக்கும்?

7. இரண்டு திருமணம் யாருக்கு நடக்கும்?

8. பல திருமணம் யாருக்கு நடக்கும்?

9. ஏற்கனவே திருமணம் ஆன நபரை திருமணம் செய்பவர் யார்?

10. மிக இளவயது பெண்ணை திருமணம் செய்பவர் யார்?

11. வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்பவர் யார்?

12. குறைந்த வயது ஆணை திருமணம் செய்யும் பெண் யார்?

13. அதிக வயது ஆணை திருமணம் செய்யும் பெண் யார்?

14. மாற்று திறனாளியை திருமணம் செய்பவர் யார்?

15. காதல் திருமணம் யாருக்கு?

16. பதிவு திருமணம் செய்பவர் யார்?

17. காதலித்து பெற்றோர் சம்மதம் உடன் திருமணம் செய்பவர் யார்?

18. காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்பவர் யார்?

19. இரட்டையரை திருமணம் செய்பவர் யார்?

20. அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்பவர் யார்?

21. அண்ணனுக்கு முன் திருமணம் செய்யும் தம்பி யார்?

22. அக்காவிற்கு முன் திருமணம் செய்யும் தங்கை யார்?

23. உறவில் திருமணம் செய்பவர் யார்?

24. அந்நியத்தில் திருமணம் செய்பவர் யார்?

25. வேறு ஜாதியில் திருமணம் செய்பவர் யார்?

26. வேறு மதத்தில் திருமணம் செய்பவர் யார்?

27. அழகான கணவன் அல்லது மனைவி யாருக்கு?

28. வரக்கூடிய கணவர் அல்லது மனைவி எப்படிபட்டவராக இருப்பார்?

29. எந்த திசையில் வரன் அமையும்?

30. எவ்வளவு தூரத்தில் வரன் அமையும்?

31. படித்த கணவன் மனைவி யாருக்கு?

32. வீட்டோட மாப்பிள்ளை யார்?

33. வேலைக்கு செல்லும் மனைவி யாருக்கு அமையும்?

34. அரசு வேலையில் இருக்கும் வரன் யாருக்கு அமையும்?

35. வெளிமாநிலம் வெளிநாடு வரன் யாருக்கு அமையும்?

36. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை யாருக்கு அமையும்?

37. வசதியான வரன் யாருக்கு அமையும்?

38. சொந்த வீடு உள்ள வரன் யாருக்கு அமையும்?

39. திருமணம் எப்போது நடக்கும்?

40. திருமணம் யாருக்கு கோயிலில் நடக்கும்?

41. எந்த ராசி நட்சத்திரத்தில் வரன் அமையும்?

42. பெண் பார்க்க யாரை அழைத்து செல்லலாம்?

43. கணவன் அல்லது மனைவியின் குடும்பம் எப்படிபட்டது?

44. தனிக்குடித்தனம் செல்பவர் யார்?

45. நிச்சயத்துடன் யாருக்கு திருமணம் நிற்கும்?

46. திருமணத்தின் போது யாருக்கு பிரச்சினை எற்படும்?

47. திருமணத்திற்கு பின் யாருக்கு முன்னேற்றம் உண்டாகும்?

48. திருமணத்திற்கு பின் யாருக்கு வீழ்ச்சி உண்டாகும்?

49. யாருடைய வாழ்க்கை துணைக்கு கண்டம் ஏற்படும்?

50. திருமண வாழ்க்கையில் பிரச்சனையோடு மகிழ்ச்சி இல்லாதவர்கள் யார்?

51. திருமண வாழ்க்கையில் பிரிவு யாருக்கு நடக்கும்?

52. குழந்தை பிறந்த உடன் திருமணப் பிரிவு யாருக்கு?

53. திருமணத்திற்கு பின் ரகசிய உறவில் ஈடுபடுபவர் யார்?

54. அடுத்தவர் கணவன் அல்லது மனைவியுடன் குடும்பம் நடத்துபவர் யார்?

55. சந்நியாசி யார்?

image
Adithya A changed his profile picture
50 w

image

கல்வி:

கல்விக்கான காரக்கிரகம் புதன்:

சூரியன்:

கல்வியில் வெற்றியை குறிக்கும் முதன்மையான மதிப்பையோ மார்க்கையோ குறிக்கும்.

சந்திரன்:

கல்வியில் பயிலும் இடத்தையே மாற்றம் தன்மையுடையது. தோலை தூரம்பயணம் செய்து படிப்பது ஏதாவது திருட்டுதனம் செய்து படிப்பது (காப்பி அடித்தல்) பணம் கொடுத்து சேர்த்தல் அல்லது கல்விக்காக அதிக செலவு செய்தல்.

செவ்வாய்:

கல்விக்கு தடை ஏற்படுத்தும்

குரு:

கல்வியில் முழுமையடைவதை குறிக்கும் நீடித்த கல்வி கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் தனது சுய முயற்க்கியலேயே படித்து கொள்ளுதல்.


சுக்கிரன்:

இரட்டை கல்வி படிக்கும் வாய்ப்பு உண்டு. உயர்ந்த அறிவுடன் கல்வியை அணுகுவார். வசதியான சூழல் கல்வி பயில்வார்.

சனி:

மந்தமான கல்வியையும் காலத்திற்குள் கல்வியை முடிக்க முடியாத நிலையையும் குறிக்கும். கல்வி தடை ஏற்படும்.

ராகு:

வெளி தேசங்கள் சென்று கல்வி கற்பார். அந்நிய மொழி கற்பார். கல்வி கற்பதற்காக பல ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவார்.

கேது:

கல்வி தடை ஏற்படும்.

image

ராசி அடிப்படையில் அமையும் தொழில்கள்:

மேசராசி தொழில்கள்:

காவல் துறை
இராணுவம்
அரசு உத்தியோகம்
தீயணைப்புத்துறை
விளையாட்டுத்துறை
பொறியியல் துறை
இரும்பு சம்பந்தமான தொழில்
உலைக் கூடம்
செங்கல் சூலை
மட்பாண்டங்கள் தயாரிப்பு
சுரங்கத்தொழில்
விவசாயம்
சமையல் கலை
அறுவை சிகிச்சை மருத்துவம்
ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை
நுட்பமான தொழில்

ரிஷபராசி தொழில்கள்:

நிதி நிறுவனங்களில் பணி புரிதல்
கலைப் பொருட்கள்
அழகு சாதனப் பொருட்கள்
ஆடம்பர பொருட்கள்
அலங்கார பொருட்கள்
வாசனைப்பொருட்கள்
சுவையான உணவு பொருட்கள்
இனிப்பு பானங்கள் விற்பனை செய்தல்
தங்கும் விடுதி
கேளிக்கை விடுதி
கருவூலத்துறை
திரைப்படம்
கவிதை எழுதுதல்
பாட்டு பாடுதல் போன்ற கலைத் தொழில்
பொன், வெள்ளி மற்றும் ரத்தினம் வியாபாரம்
கால்நடை வளர்ப்பு தொழில்
பூ வியாபாரம்
வங்கி/நிதி துறை பணி

மிதுனராசி தொழில்கள்:

கணக்கர்
தணிக்கையாளர்
செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை
கல்வித்துறை
தபால் மற்றும் தந்தி துறை
தொலைபேசி துறை
புத்தக தொழில்
கணிதத்துறை போன்ற வேலைகள்
சட்டம் மற்றும் நீதித்துறை
ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள்
நவீன பொறியியல் துறை
எழுத்துத் துறை
மேடைப்பேச்சு
ஜோதிடம்
பலவிதமான வியாபாரங்கள் செய்தல்
தூதரகங்கள்
கதை கட்டுரை எழுதுதல்
பேச்சாளர்
ஆசிரியர் பணி
ஆடம்பரப் பொருள் விற்பனையாளர்

கடகராசி தொழில்கள்:

மருத்துவம் துறை
ஜோதிடம்
போக்குவரத்து துறை
திரவ பொருட்கள்
நீர் சம்பந்தமான தொழில்கள்
உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல்
ஏற்றுமதி இறக்குமதி
கடல் கடந்து வியாபாரம்
வேளாண் தொழில்
கலைத்துறை
கல்வித்துறை

சிம்மராசி தொழில்கள்:

அரசு உத்தியோகம்
அரசியல்
பிரதம மந்திரி
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்
இரும்பு தொழில்
நெருப்பு சம்பந்தமான தொழில்கள்
சமூகசேவை செய்தல்
தர்ம ஸ்தாபனங்கள் நடத்துதல்
அறநிலையத்துறை
முதல் மந்திரி

கன்னிராசி தொழில்கள்:

தணிக்கையாளர்
பலவிதமான வியாபாரம் செய்பவர்
எழுத்தர்
சில்லரை வியாபாரம் செய்பவர்
பத்திரிக்கை துறை
அறிவாற்றலால் பணம் சம்பாதிக்கும் தொழில்
எல்லாவகை வியாபாரிகளும்
ரியல் எஸ்டேட் துறை
புரோக்கர்கள்
ஜோதிடர்கள்

துலாம்ராசி தொழில்கள்:

வட்டி தொழில்
சினிமாத்துறை
அலங்கார பொருள் விற்பனை
தங்கம வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம்
சொகுசு வாகனங்கள் 6.தரகுத் தொழில்
தங்கும் விடுதி
நாடகம் நடிப்பு,பாட்டு தொழில்
வங்கி பணி
நீதி மன்றம் பணிகள்
வாசனை பொருள் விற்பனை
பூவியாபாரி

விருச்சிகராசி தொழில்கள்:

ஜோதிடம்
ஆன்மீகம்
பூமி தொழில்
தாது பொருள்கள்
இரும்பு தொழில்
நெருப்பு சம்பந்தமான தொழில்
பொறியியல்துறை
மின்னியல் துறை
ஆராய்ச்சி செய்தல்
உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில்
கடின உழைப்பின் மூலம் வாழ்க்கை அமைத்துக் கொள்வது.
மாந்தீரகம்

தனுசு ராசி தொழில்கள்:

நிதித்துறை
கல்வி த்துறை
ஆயுதசாலை
காட்டிலாகா துறை
மர வியாபாரம்
ஆன்மிகதுறை
போர்ப்பயிற்சி
சமூகசேவை ஸ்தாபனங்கள்
தர்ம ஸ்தாபனங்கள்
நீதிபதி

மகரராசி தொழில்கள்:

உர வியாபாரம்
உணவு விடுதி
உணவுப் பொருள்கள் விற்பனை
இரும்பு வியாபாரம்
எண்ணை வியாபாரம்
சுரங்க தொழில்
திரவபொருட்கள் அனைத்தும்
கழிவுப் பொருள் விற்பனை
தோல்வியாபாரம்
இரும்பு வியாபாரம்
விவசாயம்
கட்டிட வேலை
கல் மண் வியாபாரம்
கடின மான வேலைகள்
ஊதியம் குறைவான வேலை
லாண்டரி

கும்பராசி தொழில்கள்:

ஆன்மீகம்
ஆராய்ச்சித்துறை
ஆசிரியர்
நிர்வாக பொறுப்பு
வாயுப் பொருட்கள் விற்பனை
விமானத்துறை
வின்வெளித் துறை
சிறைச்சாலை
தொல்பொருள் ஆராய்ச்சி
பொறியியல் துறை
சுரங்க துறை
பொதுஜன தொடர்பு
வழிகாட்டி
இறைச்சிக் கடை
உளவுத்துறை

மீனராசி தொழில்கள்:

நீர் நிலைகளில் வேலை
ஆலயப்பணி
கல்விதுறை
ஆன்மீகம்
மருத்துவ மனை
நிதி துறை
நீதி துறை
தூதரகம்
வங்கி
கடற் படை
மத போதகர்கள்
நீர் பாசன தொழில்
பால் தயிர்
வெண்ணெய் தொழில்
கள்,சாரயகடை
எழுத்தாளர்
மருந்து வியாபாரம்
எண்ணெய் கடை

image

பஞ்சபூத ராசிகள்:

இந்த பிரபஞ்சம் பஞ்சபூதங்களான நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய வற்றால் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

ஜோதிடத்தில் இந்த ஐந்து பூதங்களில் ஆகாயத்தை நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது மற்ற நான்கு பூதங்களும் ராசிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நெருப்பு - உடனடிசெயல்பாடு.

நிலம் - நிதானமான செயல்பாடு, பொருமையாக செயல்படுதல்.

காற்று - போராட்டமான செயல்பாடு,விசயங்களை கடத்துதல். தகவல் பறிமாற்ற செயல்கள்.

நீர் - உணர்ச்சிகரமான செயல்பாடுகள்

நெருப்பு ராசிகள்:

முன்கோபம் பாசமின்மை முரட்டுத்தனம் ஆணவம் முரட்டு உருவம் பொய் சொல்ல ஊதாரித்தனம் ஆயுதம் வைத்துக் கொள்ளல் தைரியம் தன்னம்பிக்கை துணிச்சல் முரட்டுத்தனமான செயல் முரட்டு கல்வி நெருப்பில் வேலை கட்டாய காதல் உறவு கற்பழித்தல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி ஆபாச நடனம் ஈடுபடுதல் காமவெறி கொண்ட குழந்தை உஷ்ண சம்பந்தமான நோய்களுக்கும் ஏற்ற மனைவி எதிர்ப்பாளர்கள் தசைப்பகுதியில் சேதமடைதல் கொலை மிரட்டல்கள் விபத்து தற்கொலை வெறிபிடித்த கல்விக்கேற்ற புத்திக்கூர்மையின்மை மதவெறி பல உறவுகள் நிர்வாகத்திறன் தலைமை அதிகாரி மூர்க்க குணமடைய நண்பர்கள் பேராசை தற்புகழ்ச்சி ரகசிய ஈடுபாடு சதிவேலைகள் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் குணம் உடையவர்கள்

நில ராசிகள்:

சாந்தகுணம் பருத்தவுடல் பந்தபாசம் சுறுசுறுப்பு மரியாதை மிருதுவான உடல்வாகு மனம் விட்டு பேசுதல் எதையும் விருத்தி செய்தல் பாதுகாத்தல் விட்டுக்கொடுக்கும் மனம் தைரியமின்மை கோழைத்தனம் ஆழ்ந்த கல்வி விவசாயம் வீட்டு பிராணிகளை வளர்த்தல் அன்பு நிறைந்த காதல் உறவு கலைகளில் ஆர்வம் சுற்றுப்புற சூழலில் நோய் ஏற்படுதல் ஒவ்வாமை நோய்கள் உணவுகளில் பாதுகாப்பு ஒழுக்கமற்ற மனைவி பந்பாசமுடைய எதிர்ப்பாலர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு இடி விழுதல்புயலில் சிக்கி கொள்ளுதல் அந்த பாசத்தால் பாதிப்பு ஏமாற்றங்கள் பலதார சம்பந்தம் அயலவர் உறவுகள் ஆழ்ந்த கல்வியை ஆராய்ச்சித் திறன் கற்றதை தனக்குள்ளே வைத்துக்கொள்ள மருத்துவம் உணவு உடை காய்கறிகள் உணவுப் பொருட்கள் விவசாய தொழிலில் ஈடுபடுதல் பந்த பாசம் நிறைந்த நண்பர்கள் பேராசை உடையவர்கள் நல்வழிகளில் ஆராய்ச்சி உடையவர்கள்

காற்று ராசிகள்:

ஆணவ குணம் விளையாட்டுகள் அபாரமான நடிப்பு மெலிந்த தேகம் விகடமான பேச்சி பெருமை வாய்ந்த பேச்சு தெளிவான பேச்சு பதற்றமும் பலமுறை முயற்சி கல்வியில் கணிதப் புலமை கதை கட்டுரை பாடல் எழுதுதல் சிரிப்பு நடிகர் கதாசிரியர் தந்திரக் கணக்குகள் விளையாட்டுகள் சுவாச சம்பந்தமான நோய்கள் கேஸ் கம்பெனியில் வேலை விமான சேவை பெட்ரோல் ஆராய்ச்சி மையங்களில் வேலை கம்பெனிகள் புத்திக்கூர்மையான மனைவிபார்ட்னர் எதிர்ப்பாளர்கள் இயற்கையின் சீற்றத்தால் விபத்து வெடி விபத்து காற்றழுத்தத்தால் விபத்து ஆராய்ச்சித் திறன் உயர்கல்வியில் சிறந்து விளங்குவார் ஆசிரியர் உளவுத்துறைகள் விமானத்தில் பயணி அறிவு ஆற்றல் மிகுந்த பணிகள் சந்தோஷமாக இருந்தால் புத்துணர்ச்சியுடன் இருப்பவர் கவலை இல்லா மனிதர் ரகசிய ஆராய்ச்சி துப்பறிதல் புராண ஆராய்ச்சி ஆராய்ச்சி கல்வி போன்ற குணங்களை உடையவர்

நீர் ராசிகள்:

அமைதியான குணம் மௌனம் தெய்வகுணம் பற்றற்ற நிலை பருத்த தேகம் சாந்தமான பேச்சு எதையும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என தன்மையுடைய பேச்சு தெளிவற்ற பேச்சு சலன மனம் எதையும் உடனே புரிந்து கொள்ளல் சூழலுக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளல் கல்வியில் சிறந்து விளங்குதல் கற்றுத்தருதல் விவசாயம் ஈடுபாடு நீர்நிலைகளில் கவனம் ஞானம் பெறல் சிற்றறிவை பேரறிவாக வளர்த்தல் ஞானவான்கலைகளில் மேதையாக நீர் சம்பந்தமான உபாதைகள் திரவப் பொருள் சார்ந்த பணிகள் தெய்வ நம்பிக்கை உடைய மனைவி பார்ட்னர் எதிர்ப்பாளர்கள் நீர்நிலைகளில் விபத்து கண்டங்கள் மழையால் பாதித்தல் மூத்திரக் குழாய்களில் தங்கி உயர் கல்வியில் சிறந்து விளங்குதல் சோதனையாளர் அதீத காம உணர்வு கொள்பவர்கள் ஆன்மீக ஈடுபாடு கப்பலில் பயணம் செய்பவர்கள் துறைமுகப் பாலம் நீர்த்தேக்கங்களில் வேலை செய்பவர்கள் பிறருக்கு உதவும் நல்லெண்ணம் சந்தோஷமான மனம்நெருங்கிப் பழகும் குணம் ஆராய்ச்சி மூலம் நீர் நிலைகளை அறிதல் போன்ற குணங்களை உடையவர்கள்

பஞ்சபூதங்கள் ஒருவடையை குணம் புத்திக்கூர்மையை ஆளுமை செய்வதால் பஞ்சபூதங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

image

ராசிகளின் இடங்கள்:

ராசிகளின் தன்மைகளை வைத்து இடங்களை பிரிக்கலாம் இது திருடு போன பொருள் உள்ள இடம் நபர் இருக்குமிடம் புதிய விக்ரகங்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

image

ராசிகளும் இயல்புகளும்:

ராசிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள உருவங்களின் இயக்கத்தை வைத்து பிரிக்கலாம் இது உயிரினங்களின் இயல்புகளை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படுகிறது.

image

ராசியின் உடல் கூறுகள்:

மனித உடலை இராசிகளில் 12 பாவமாக பிரிக்கலாம். இது நோய்களின் விபரம் சேதம் ஏற்படும் உறுப்பு நமக்கு பிடித்த உறுப்பு பற்றிய விவரங்களை அறிய உதவுகிறது.

image

ராசியின் உருவங்கள்:

ராசிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள உருவங்கள் அந்த ராசியின் குணத்தை வைத்து பிரிக்கலாம் இந்த வடிவங்களின் குணங்களை ராசிகளுக்கு உள்ளது.

image

ராசியின் காலங்கள்:

ராசியின் காலங்களை நேரம் சரம் ,ஸ்திரம், உபயம் என்று வைத்திருக்கலாம் இது ஒரு சம்பவம் எந்த காலத்தில் நடக்கப்போகின்றது என்பதை உணர்த்துகிறது.

ஒருநாள் என்பது23 மணி 56 நிமிடம் இதை நமது வசதிக்காக 24 மணி நேரம் கொண்டது ஒரு நாள் என எடுத்துக் கொள்கிறோம் இதை மூன்று பாகமாகப் பிரித்தால் 8 மணிநேரம் இடைவெளி கிடைக்கும் காலை 8 மணி வரை காலை பொழுது 4 மணிவரை நண்பகல் இரவு 12 மணி வரை மாலை என எடுத்துக்கொள்ள வேண்டும்.

image