துலாம் ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:
01 இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.
02. கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை, தயிர், உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.
03. வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.
04. மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.
05. நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.
06. வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
07. நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள். அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.
08. பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.
09. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.
10. தானமாக எதையும் பெறாதீர்கள். அது வறுமையை ஏற்படுத்தும்
