மேஷ ராசி லால் கிதாப் பரிகாரங்கள் :

01. எந்தப் பொருளையும் இலவசமாக வாங்காதீர்கள். ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .

02. சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.

03. பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும். பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.

04. ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது. இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.

05. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.

06. தாய், குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.

07. உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும். அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்

image